Published : 14 Dec 2019 07:47 AM
Last Updated : 14 Dec 2019 07:47 AM

தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல்: 600-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன

மனோஜ் முத்தரசு

சென்னை

தனியார் பொறியியல் கல்லூரி களில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்களிடம் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் இயங்கும் 500-க் கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் செயல்பட்டு வரு கின்றன. இந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் தனியார் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கல்லூரி அமைத்துள்ள போக்கு வரத்து, விடுதி, உணவு போன்ற வைகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வதில்லை.

இதனிடையே, கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் (தேர்வு) தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, புகார் வரும் கல்லூரிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு சேர்க்கை கடந்த ஜூலை மாதம் நிறைவுபெற்றது. இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கின. இதனிடையே மாண வர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கல்லூரிகள் வசூலிப்ப தாக கமிட்டியில் புகார் அளித் துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை கமிட்டி வட்டாரங்கள் கூறும்போது, “கூடு தலாக கட்டணம் வசூலிப்பதாக சுமார் 600-க்கும் மேற்பட்ட புகார் கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள் ளோம். அதேவேளையில், மாணவர் கள் கூடுதல் கட்டணம் குறித்து சரியான ஆவணங்களை எங்களி டம் சமர்பிக்கவில்லை.

இதனால், ஆதாரங்களை சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் விளக்கமும் கேட்டுள்ளோம். அதேபோல் 2-ம், 3-ம் மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் நிலுவையில் உள்ளன. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டால், அதுதொடர்பான புகார் களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ அல்லது 044-22351018, 22352299 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x