Last Updated : 13 Dec, 2019 01:30 PM

 

Published : 13 Dec 2019 01:30 PM
Last Updated : 13 Dec 2019 01:30 PM

பெங்களூருவில் 107-வது தேசிய அறிவியல் மாநாடு: மோடி தொடங்கி வைக்கிறார்

பெங்களூருவில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ள 107-வது தேசிய அறிவியல் மாநாட்டை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்திய அறிவியல் மாநாடு வரும் ஜனவரி மாதம் 3 முதல் 7 ஆம் தேதி வரை பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்துக் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் கூறும்போது, ''இந்திய அறிவியல் மாநாடு, நமது பழமையான, பெருமை வாய்ந்த அறிவியல் நிகழ்வுகளில் ஒன்று. இது பெங்களூருவில் நடப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்'' என்றார்.

இந்த மாநாட்டி பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். இந்த ஆண்டு மாநாடு, 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: கிராமப்புற வளர்ச்சி' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் 15 ஆயிரம் அறிவியலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பாதுகாப்புத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அறிவியல் மாநாட்டுடன், 'ப்ரைட் ஆஃப் இந்தியா 2020' என்ற கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதில் புத்தாக்க அறிவியல் சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x