Published : 12 Dec 2019 05:04 PM
Last Updated : 12 Dec 2019 05:04 PM

நாடு முழுவதும் இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் எத்தனை?- மத்திய அமைச்சர் விளக்கம்

நாடு முழுவதும் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன என்பது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''டிசம்பர் 2019 கணக்கெடுப்புப்படி நாடு முழுவதும் 344 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

இதில் 71 பல்கலை.கள், கடந்த 3 ஆண்டுகளாக யூஜிசி நிபுணர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாடத் திட்டங்கள், ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், நிதி நம்பகத்தன்மை உள்ளிட்ட விவகாரங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள், யூஜிசி விதிமுறைகள் 2003-ஐப் பின்பற்றுகின்றனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.

இதுவரை யூஜிசி ஆய்வுக்காக 263 பல்கலைக்கழகங்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பித்துள்ளன. இதில் 199 பல்கலை.களில் யூஜிசி ஆய்வு மேற்கொண்டுள்ளது. 199 பல்கலைக்கழகங்களில் 132, தங்களின் ஒப்புதல் அறிக்கையையும் வழங்கியுள்ளன'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 900-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 404 மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஆகும். அவற்றுடன் 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்ளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x