Published : 12 Dec 2019 09:34 AM
Last Updated : 12 Dec 2019 09:34 AM

கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்; உள்ளாட்சித் தேர்தல் பணிகளை விரைவுபடுத்துங்கள்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை

கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து பேசி உள்ளாட்சித் தேர்தல் பணிகளை விரைவுபடுத்துங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை மற்றும் 9 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.7-ம் தேதி தேர்தல் அறிவிக் கப்பட்டது. தொடர்ந்து 9-ம் தேதி அறிவிக்கை வெளி யிடப்பட்டு, அன்றிலிருந்தே வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கியது. இந்த தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ய திமுக கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

நிர்வாகிகள் வருகை

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று மாலை வந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் பொன் னையன், பா.வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா, வெங்கடேஷ் பாபு, ராஜேஷ் உள்ளிட்டோரும் வந்தனர். தொடர்ந்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வருகை தந்தார். இவர்களுடன் மாலை 6 மணியில் இருந்து 7.30 மணிவரை முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கடந்த வாரம் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இருவரும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டணி கட்சிகளிடமிருந்து...

அப்போது, கூட்டணி கட்சிகளிடம் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் அந்தந்த கட்சிகள் விரும்பும் இடங்கள் குறித்த பட்டியல்களை கேட்டு பெற்றனர்.

அப்போது, அதிமுகவின் அந்தந்த மாவட்ட செயலாளர்களு டன் பேசி, இந்த பட்டியல்படி ஊரக உள்ளாட்சிகளில் தேவைப்படும் இடங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தி லும், இது தொடர்பாக ஒருங்கி ணைப்பாளர்கள் மாவட்ட செய லாளர்களிடம் அறிவுறுத்தியிருந் தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தங்கள் கட்சியினருக்கு வாய்ப்புள்ள இடங்கள் குறித்த பட்டியலை நேற்று அளித்தார்.

நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

அதன்பின், சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப் புள்ள இடங்கள், கூட்டணி கட்சியி னருக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை அவர்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும், தேர்தல் அறிவிக்கப்படாவிட்டாலும் சென்னையில் தேர்தல் முன்னேற் பாடுகளை விரைவுபடுத்த வேண் டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு சென்னைக்கு மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து அதிமுக மாவட்ட செய லாளர்களுக்கும் அவர் அளித்துள்ள தாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜெயக்குமார் தகவல்

இதுகுறித்து, கூட்ட முடிவில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தற்போது தேர்தல் பணியில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு ஆலோசனைகளை யும் வழங்கினார்.

கூட்டணி கட்சிகளு டன் சுமுக முறையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் பேசி, விவரங்களை தலைமைக் கழகத்துக்கு அளித்ததும், அதிமுக வேட்பாளர் பட்டியல் இறுதியாகும்’’ என்றார்.

புகார் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு : ஏசிஎஸ்

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறும்போது, ‘‘முதல்வர், துணை முதல்வரிடம் புதிய நீதிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை மட்டும் தேர்வு செய்து பட்டியல் அளித்துள்ளோம். அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து எங்கள் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஊரக உள்ளாட்சிகளில் தேவைப்படும் இடங்களை அவர்கள் அளிப்பார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலில் வெளிப்படையாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். தற்போது ஊழல் குற்றச்சாட்டு இல்லாத வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எங்களிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x