Last Updated : 11 Dec, 2019 07:38 PM

 

Published : 11 Dec 2019 07:38 PM
Last Updated : 11 Dec 2019 07:38 PM

நெல்லையில் பாரதியார் படித்த பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி

பாரதியார் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியார் படித்த மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் தேசபக்தி பாடல்களைப் பாடி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் ச. சரவணன் பங்கேற்று பேசினார். பெண் விடுதலைக்காக போராடிய பாரதியின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பாரதியார் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர், விவசாய அணி மாநில பொதுசெயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் உள்ளிட்டோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோல் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினரும் மாலை அணிவித்தனர்.

பாரதியார் உலக பொதுசேவை நிதியத்தின் சார்பில் பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிதியத்தின் தலைவர் அ. மரியசூசை தலைமை வகித்தார். பொதுசெயலாளர் கோ. கணபதிசுப்பிரமணியன், வேணுவன ரோட்டரி சங்க தலைவர் நடராஜன், மதிதா இந்துக் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் உஷாதேவி, நிதியத்தின் துணை செயலாளர் சு. முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 138வது பிறந்த தினவிழா பள்ளி தமிழ்மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் கருப்பசாமி முன்னிலையில், தலைமைஆசிரியர் க.கோமதிநாயகம், பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மாணவ-மாணவிகளிடம் பாரதியின் கவித்திறன் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x