Published : 11 Dec 2019 10:43 AM
Last Updated : 11 Dec 2019 10:43 AM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு

கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தங்கள் நாட்டுக்கு வருமாறு ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான வாஸிம் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. இத்தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக இருந்தால், அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x