Published : 11 Dec 2019 08:10 AM
Last Updated : 11 Dec 2019 08:10 AM

புவி வெப்பம் அதிகரிப்பதால் விரைவில் பனிமலைகள் உருகும்: புதிய ஆய்வில் தகவல்

நியூயார்க்

இதுவரை அழிந்தது போக பூமியில் மீதமுள்ள பனிமலைகளும் உருகும் நிலையில் உள்ளன. தற்போது இருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் பருவநிலை நெருக்கடியின் காரணமாக வடக்கு இமயமலைகள் மற்றும் தெற்கு ஆண்டெஸ் மலைகள் அடுத்த பத்தாண்டு அல்லது அதற்கும் விரைவாக மறைந்துவிடும் நிலையில் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறும்போது, “முதல் பனிமலை பப்புவா நியூ கினியா, இந்தோனேசியா பகுதிகளில் உருகும் நிலையில் உள்ளன. உலகம் முழுவதும் நிகழவிருக்கும் பனிமலைகளின் அழிவிற்கு இது அபாயச் சங்காக இருக்கும்”, என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு பிஎன்ஏஎஸ் இதழில் வெளியாகியது. இதில் 2015 முதல் 2016 வரை நியூ கினியாவின் மேற்கு பாதி பகுதிகளில் கடலின் வெப்பம் (எல்நினோ) வேகமாக அதிகரித்ததால் உச்சியில் உள்ள பனிமலைகள் உருகின.

எல் நினோ என்பது வளிமண்டலத் தில் வெப்பம் அதிகரிப்பதால் கடல் நீரிலும் வெப்பம் அதிகரிப்பதுதான் எல்நினோ. ஆனால் இது பருவநிலையின்இயல்பான செயல்பாடாக இல்லாமல் புவியின் வெப்பம் விரிவடைவதால் ஏற்படுகிறது. எல் நினோமிக வலிமையாக இருக்கக் கூடும் என்பதால் பப்புவா நியூ கினியாவில் பனிமலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் மறையும் என்கின்றனர் ஆய் வாளர்கள்.

இணை ஆய்வாளர் லோன்னீ தாம்ஸன்கூறும்போது, “இதை தொடர்ந்து மற்ற பனிமலைகளான தான்சானியாவில் இருக்கும் கிளிமாஞ்சாரோ மற்றும் பெருவில் இருக்கும் குயுல்சயாவும் பாதிக்கப்படும். மேலும், பப்புவா நியு கினியா, இந்தோனேசியாவின் பனிமலைகளில் ஏற்படுவது தான் உலகம் முழுவதும் என்ன நடக்க போகிறது என்பதற்கான குறியீடாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x