Published : 10 Dec 2019 10:58 AM
Last Updated : 10 Dec 2019 10:58 AM

அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு: கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,211 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 48 லட்சம்மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள்பணிபுரிகின்றனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசுபல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் அரசின் திட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கல்விஅதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள் கூறியதாவது:நம் நாட்டில் பிற மாநிலங்களைவிட அதிகளவில் ரூ.28 ஆயிரம் கோடி வரை பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக கற்றல் உபகரணங்களும், விளையாடுவதற்குரிய பொருட்களும் அனைத்துபள்ளிகளுக்கும் தரப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக ஆசிரியர்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதெரிய வந்துள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னெடுப்பதில்லை உட்பட பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளன.

மறுபுறம் துறை அதிகாரிகள் ஆய்வுகளுக்கு செல்லும் முன்னர் தகவல் தெரிவித்துவிடுவதால் தலைமையாசிரியர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை தயாராக செய்துவிடுகின்றனர். இதனால் தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க முன்னறிவிப்பு இன்றி பள்ளிகளுக்குசென்று கள ஆய்வு செய்ய முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடீர்ஆய்வின்போது, பள்ளிகளில் சுகாதார வசதி, தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா, மாணவர்களின் கற்றல் திறன், அரசு வழங்கிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா, மாணவர்கள்ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்களா என்பதை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x