Published : 10 Dec 2019 08:17 AM
Last Updated : 10 Dec 2019 08:17 AM

உத்தர பிரதேசத்தில் ‘பசு சஃபாரி’- கால்நடைத் துறை அமைச்சர் தகவல்

லக்னோ

பசுக்களின் பாதுகாப்புக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையிலும் ‘பசு சஃபாரி’ அமைக்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் சாலைகளில் திரியும் பசுக்களை பராமரிக்க ‘பசுக்கள் காப்பகம்' அமைக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கெனவே அறிவித்தது. இதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பசுக்கள் பாதுகாப்புக்கும் பராமரிக்கவும் மட்டுமின்றி அவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் ‘பசு சஃபாரி’ அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் லட்சுமிநாராயண் சவுத்ரி கூறுகையில், ‘‘ஒரே இடத்தில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை பசுக்களை பராமரிக்கும் வகையில் பசுசஃபாரி அமைக்கப்படும். மற்றவிலங்குகளை சென்று பார்வையிடுவது போன்று மாடுகளையும் பார்வையிடலாம்.

சோதனை அடிப்படையில் மகராஜ்கஞ்சில் பசு சஃபாரி அமையவுள்ளது. பசுவின் சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைகள், பசுவின் கழிவுகளில் இருந்து மருந்துப் பொருட்கள் தயாரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x