Published : 10 Dec 2019 08:15 AM
Last Updated : 10 Dec 2019 08:15 AM

தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய பல்கலைக்கழகங்கள் உலக தலைமையாக மாறவேண்டும்: குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

உலக அளவில் சிறந்த பல்கலைக் கழகங்கள் தரவரிசையில், இந்திய பல் கலைக்கழகங்கள் நல்ல இடங்களை பெற முயற்சி செய்யவேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார்.

இதனையடுத்து அவர் பேசிய தாவது:டைம் வேல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங் தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சிறந்த பல்கலையின் தரவரிசையில், முதல்300 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட வரவில்லை. இது உண்மையாகவே வருந்தத்தக்கது. இதற்கான காரணிகளை நாம் ஆராயவேண்டும். தரவரிசையில், அடுத்த ஆண்டு முதல் 100 இடங்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்கள் வரவேண்டும்.

இந்தியா கல்வியில் மீண்டும், விஷ்வ குருவாக (உலகதலைமை) மாறவேண்டும் அதற்கானநடவடிக்கைகளான, கல்வியின் தரம்ஆகியவற்றில் பல்கலைக்கழகங்கள் தீவிரம் காட்டவேண்டும்.

மத்திய, மாநில பல்கலைக்கழகங் களில் உள்ள பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

திறன் வாய்ந்த ஆசிரியர்கள்இந்திய பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாக்க, திறன் வாய்ந்த ஆசிரியர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை மாணவர்களை கவரும் விதமாக இருக்கவேண்டும். ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ஆசிரியர்களையும், மாணவர்களையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கவேண்டும். ஆசிரியர்கள் தங்களின் பொறுப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டும்பல வெளிநாட்டு பல்கலைக்கழ கங்களில், ஆசிரியர்களின் செயல்திறனை, பிற ஆசிரியர்களும், மாணவர்களும் மதிப்பீடு செய்கிறார்கள். நாமும் அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டால், சிறந்த செயல்திறன் கொண்ட ஆசிரியர்களை உருவாக்க முடியும்.

கல்வி என்பது முதலில் அறிவு,அதிகாரம், மேம்பாட்டுக்கு உதவவேண் டும். இறுதியாகதான் வேலைவாய்ப்பு. ஆனால், துரதிர்ஷ்டமாக நமது கல்வி முறை முதலில் வேலைவாய்ப்பை நோக்கிச் செல்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நாம் இருந்ததால், நமது வரலாறு சரியாக எழுதப்படவில்லை. சரியான வரலாற்றை நமது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கவேண்டும். தொழிற்கல் வியை ஊக்குவிக்கவேண்டும்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x