Published : 10 Dec 2019 08:02 AM
Last Updated : 10 Dec 2019 08:02 AM

செய்திகள் சில வரிகளில்: இத்தாலியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

புதிய பொறியியல் கல்லூரிகள்: அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி

பொறியியல் கல்லூரி மற்றும் உயர்கல்வி தொடர்பாக மக்களவையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், “யூஜிசி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) புதிய பொறியியல் கல்லூரி அமைப்பதற்காக எந்த பரிசீலனையும், விண்ணப்பமும் நிலுவையில் இல்லை. ஏஜசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும், இந்தியதொழில்நுட்ப நிறுவனங்களிலும் (ஐஐடி) ஒரு சில இடங்களே காலியாக உள்ளன” என்றார்.

இத்தாலியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ரோம்

இத்தாலி நாட்டின் முகெல்லோவில், 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று அதிகாலை ஏற்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் தங்களின் வீட்டைவிட்டு உடனே வெளியேறினர். இதனால், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளி, கல்லூரி, குடியிருப்புகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்கனியில் புளோரன்ஸ் நகருக்கு வடகிழக்கில் சுமார் 31 கி.மீட்டரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கைவினைப் பொருட்கள் துறை புத்துயிர்: முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் கைவினைப் பொருட்கள் துறை புத்துயிர் பெற்றுள்ளது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

யுனெஸ்கோவுடன் இணைந்து மாநிலத்தில்10 கைவினை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 25,000 கைவினை கலைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவினைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவ்வொரு ஆண்டும் ‘அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரம்’ கொண்டாப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 8 முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பிஸ்வா பங்களா நிலையங்களை அமைக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.- பிடிஐ

இந்தியா- சீனா உறவை வலுப்படுத்த டெல்லியில் கலைக் கண்காட்சி

புதுடெல்லி:

இந்தியா- சீனா இடையிலான 2-வது முறை சாரா மாநாடு மாமல்லபுரத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில், இந்தியா- சீனா நாட்டின், 70 ஆண்டு அரசு உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து 70 நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாட்டு கலைஞர்களின் 70 ஒவியங்கள் அடங்கிய கலைக் கண்காட்சி டெல்லியில் நேற்று நடந்தது. கண்காட்சியில் பேசிய சீன தூதரின் மனைவி பாவோ ஜிகிங், “இந்தியா-சீனா அரசு உறவின் 70-வது ஆண்டை கொண்டாடும் விதமாக சீன தூதரகத்தின் பெண்கள் குழு மற்றும் ஓ பி ஜிண்டால் பல்கலைக்கழகம் இணைந்து 2020-ல் பல்வேறு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x