Published : 09 Dec 2019 10:03 AM
Last Updated : 09 Dec 2019 10:03 AM
திருச்செங்கோடு அருகே கந்தம்பாளையம் எஸ்கேவி வித்யாஸ்ரமம் பள்ளியில் சின்மயா மிஷன் கல்வி அறக்கட்டளை சார்பில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எஸ்கேவி வித்யாஸ்ரமம் பள்ளி ஆலோசகர் பிரேமலதாவரவேற்றார். கோவை சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி முதல்வர் ஜி.ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், மனித வாழ்வின் சிறப்பு, போதைப் பொருள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நாம் அடிமையாவதற்கான காரணம், அவற்றில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய கதைகளுடன் விளக்கினார்.
தொடர்ந்து சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி ஆசிரியர் கணேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில் போதைப் பொருட்களால் உடலில் ஏற்படும் பாதிப்பு, பொருளாதார ரீதியாக பாதிக்கும் விஷயங்கள் குறித்துவிளக்கம் அளித்தார். மேலும், மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மேலும், போதைப் பொருட்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, இதில் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இதில் பள்ளி மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் உள்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!