Published : 09 Dec 2019 09:50 AM
Last Updated : 09 Dec 2019 09:50 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: அழகிய மீன்கள்!

ஜெயந்தியும் அவரது தங்கை நளினியும் ஓர் மீனகத்துக்குள் நுழைகிறார்கள். அவர்களது உரையாடலின் ஒரு பகுதி இது.

Jayanthi – This house of fish is very beautiful.

Nalini – Yes. The fishes are beautiful.

Jayanthi – They are water animals.

Nalini – They have scales on their body.

Jayanthi – I don’t find any scale on the fish. I have a scale in my geomentric box.

Nalini – (smiles) Do you know that the largest fish is the whale shark?

Jayanthi – Is it whale or shark? I am confused.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

தொட்டிகளில் மீன்களை வளர்த்துக் காட்சிப்படுத்தும் இடத்தை house of fishes என்று கூறமாட்டார்கள். Aquarium என்றுதான் கூறுவார்கள்.

Fish என்பதன் பன்மை எது என்றுகேட்டால் fish என்றும் கூறலாம். Fishes என்றும் கூறலாம். ஒரே இனத்தைச் சேர்ந்த பல மீன்களை fish என்றும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மீன்களை fishes என்றும் கூறுவார்கள்.

மீன்களை, ஜெயந்தி water animals என்று குறிப்பிடுகிறாள். நீரில் வசிக்கும் உயிரினங்களை aquatic animals என்று குறிப்பிடலாம்.

Scales என்று நளினி குறிப்பிடுவது மீன்களின் மேல்பகுதியிலுள்ள செதில்களை. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஜெயந்தி தன் ஜாமெட்ரிக் பாக்ஸில் ஒரு ஸ்கேல் இருப்பதாகக் குறிப்பிடுகிறாள். கணிசமான மாணவர்கள்அதை ‘ஜாமெண்ட்ரிக் பெட்டி’ என்று குறிப்பிடுகிறார்கள். அது தவறு. Geometric box என்று எழுதப்பட வேண்டிய அதை ஜியோமெட்ரி பாக்ஸ் என்று உச்சரிக்க வேண்டும்.

Whale என்றால் திமிங்கிலம். Shark என்றால் சுறா. ஆனால், திமிங்கலச் சுறா என்று (அதாவது Whale shark) ஒருவகை விலங்கு உண்டு. அதைத்தான் நளினி குறிப்பிடுகிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x