Published : 09 Dec 2019 09:38 AM
Last Updated : 09 Dec 2019 09:38 AM

ஹாக்கி தொடரை இந்தியா வென்றது

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடர் கேன்பரா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 1-2 என்ற கோல்கணக்கில் தோற்றது. இதன் காரணமாக இரு அணிகளும் தலா 7 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தன. இருப்பினும் இந்திய அணி இத்தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளதால் தொடரைக்கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணிக்கு 2-வது இடமும், நியூஸிலாந்து அணிக்கு 3-வது இடமும் கிடைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x