Published : 09 Dec 2019 09:36 AM
Last Updated : 09 Dec 2019 09:36 AM

கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

குறைந்தபட்சம் ரூ.1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்களை www.paytm.com மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x