Published : 09 Dec 2019 09:27 AM
Last Updated : 09 Dec 2019 09:27 AM

பிளாஸ்டிக்கை மத்திய அரசு முழுமையாக தடை செய்தால் 2025-ல் காகித சந்தை நல்ல வளர்ச்சி அடையும்: பிரபல இந்திய நிறுவனம் அறிக்கை

துடெல்லி

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை குறைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், சர்வதேச அளவில் ‘பேப்பர்எக்ஸ்’ என்ற மிகப்பெரிய காகிதகண்காட்சி லண்டனில் கடந்த வாரம்நடைபெற்றது. அதில், இந்திய நிறுவனமான ஹைவ், காகிதம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், 2017-2018-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 26,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளானது. அதில் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டது. ஆனால், மீதி இருக்கும் 40 சதவீதபிளாஸ்டிக்குகள் நிலப்பரப்புகளில் கொட்டப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்கழிவுகள் மக்குவதற்கு 1,000 ஆண்டுகளாவது ஆகும். இதனால், நிலப்பரப்பில் புதையும் பிளாஸ்டிக்குகள், நீர் வளத்துக்கும் மண் வளத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

இந்தியாவில் மொத்தமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில், 3ல் ஒரு பங்குபொருட்களை பார்சல் போன்ற பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படு கின்றன. இதனால், பேக்கேஜிங் பிளாஸ்டிக், மிக குறுகிய காலத்தில் கழிவுகளாக மாறிவிடுகின்றன.

பிளாஸ்டிக்கு மாற்று காகிதம்தான்.

ஆனால், காகிதம் தயாரிக்க அதிகஅளவில் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அதிக அளவில் தண்ணீர்தேவைப்படுவதாகவும் ஒரு பொய் யான கருத்து உள்ளது.

இந்தியாவில் புதிதாக தயாரிக்கப் படும் காகிதத்தில், மூன்றில் ஒரு பங்கு மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் (46%), வேளாண் கழிவுகள், மரத்தூள் மற்றும் மரம் வெட்டுதல் ஆலைகளிலிருந்து ஸ்கிராப் (29%) போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கின்றன.

காகித உற்பத்தியில், ஒரு கிலோ காகிதத்தை மறுசுழற்சி செய்ய ரூ.32, காகித கழிவுகளை பெற ரூ.20, போக்குவரத்து செலவு ஒரு கி.மீ.க்கு ரூ.4.50 என செலவாகிறது.

ஆனால், பிளாஸ்டிக் உறுபத்தியில் மறுசுழற்சி செய்ய ரூ.22-35, கழிவுகளை பெற ரூ. 30-36, போக்குவரத்துசெலவு ஒரு கி.மீக்கு ரூ.6.20 செலவாகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை இந்திய அரசு முழுமையாக தடைசெய்தால், ரூ. 80 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் மார்க்கெட்டில், 25 சதவீதத்தை காகித தொழில் 2025-ம் ஆண்டுக்குள் கைப்பற்றும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x