Published : 09 Dec 2019 09:19 AM
Last Updated : 09 Dec 2019 09:19 AM

மாசு காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் குறைகிறதா?- மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

புதுடெல்லி

மாசு காரணமாக மனித ஆயுள் குறைவதாக எந்த இந்திய ஆய்வும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் காற்று, நீர் மாசுபாடுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், மாசு காரணமாக உலக மக்கள் தங்களின் ஆயுட்காலத்தை இழந்து வருவதாக, உலகின் பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், மாசு ஆய்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம்மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதில்:மாசு காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் குறைவதாக, எந்த இந்திய ஆய்வும் குறிப்பிடவில்லை. எனவே, மாசு குறித்த பயத்தை மக்கள் மனதில் விதைக்கவேண்டாம். இந்தியாவில் உள்ள மாசு காரணங்களை கட்டுப்படுத்த, அரசு சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய தூய்மை காற்று திட்டம் (என்சிஏபி) நல்ல பலனைதருகிறது.

அதேபோல், என்சிஏபி திட்டத்தின் கீழ், காற்றின் தரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாத 102 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் ஜவடேகர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x