Published : 06 Dec 2019 07:58 AM
Last Updated : 06 Dec 2019 07:58 AM

இணையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்: ஒரு மாதத்துக்குள் அறிக்கை தயாரிக்க 14 பேர் கொண்ட குழு அமைப்பு

இணையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சந்திக்கும் ஆபாச சிக்கல்களை கண்காணித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, மாநிலங்களவை சார்பாக 14 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அப்போது வெங்கய்ய நாயுடு கூறுகையில், “சமூக வலைத்தளம் மற்றும்இணையத்தில் உள்ள சிக்கல்களை கண்காணிக்க 14 எம்பிக்கள் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வழிகாட்டுதலில் செயல்படும். குழுவில் உள்ள பிற உறுப்பினர்கள், குழு தலைவருக்கு தங்களுக்கு கிடைக்கும் தகவலை பகிரவேண்டும்.

இந்த குழுவானது இணையத்தில் உள்ள ஆபாச சிக்கல்கள் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்யவேண்டும்” என்றார்.

இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச உள்ளடக்கத்தால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கடந்த வாரம் மாநிலங்களவையில் எம்.பிக்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து நாயுடு குழுவை அமைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக எம்.பி.க்கள்

இந்த குழுவில், திருச்சி சிவா (திமுக), விஜிலா சத்தி யானந்த் (அதிமுக) ஆகிய 2 தமிழக எம்.பிக்கள்இடம்பெற்றுள்ளனர். மேலும், பாஜக,காங்கிரஸ், திரிமுணல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைசேர்ந்த எம்.பிக்களும் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை பொறுத்து, இணையதளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சரிசெய்ய, சட்டம் அல்லது சட்டத்திருத்தம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x