Published : 06 Dec 2019 07:53 AM
Last Updated : 06 Dec 2019 07:53 AM

பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்

சென்னை

தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், முதல்கட்டமாக சென்னையில் களஆய்வுமேற்கொண்டார். இதைத் தொடர்ந்து,மண்டல வாரியாக ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆணையர் சிஜிதாமஸ் வைத்தியன் தலைமையில் மண்டலவாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் என9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 9 முதல் 19-ம் தேதி வரை மண்டலவாரியாகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தலைமைஆசிரியர்கள், குறுவள மைய ஆசிரியர்கள் என 1,280 பேர் பங்கேற்கஉள்ளனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை commissionersedu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர சுற்றுப் பயணத்தின்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதியமுன்னேற்பாட்டுடன் தயாராகஇருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x