Published : 05 Dec 2019 11:13 AM
Last Updated : 05 Dec 2019 11:13 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - புத்தாண்டு தீர்மானம் எடுக்கபோறேன்!

ஜி.எஸ்.எஸ்.

மீனாட்சியும் பாத்திமாவும் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி இது.

Meenakshi – I am going to take some New Year solutions.
Fatima – What are they?
Meenakshi – I will be very punctuality to my school.
Fatima – What about now?
Meenakshi – I go lately to school now and than.
Fatima – What more decisions are you planning to take?
Meenakshi – I will never lie in next year.
Fatima – (smiles) Then how will you sleep?

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

புதுவருடத் தீர்மானங்கள் என்பதைக் குறிக்க new year solutions என்ற சொற்களை பயன்படுத்துகிறாள் மீனாட்சி. Solution என்றால் தீர்வு. சில நேரம் அது திரவத்தையும் குறிக்கும். தீர்மானம் என்பதைக் குறிக்கும் சொல் resolution. New year resolutions என்பதே சரி.

I will be very punctuality to my school என்றும் மீனாட்சி கூறுகிறாள். Punctuality என்றால் நேரம் தவறாமை. நான் பள்ளிக்கு நேரம் தவறாமையாக இருப்பேன் என்பது இலக்கணப்படித் தவறல்லவா? நான் பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்வேன் என்பதுதானே சரி? எனவே மீனாட்சி I will be very punctual to my school என்று கூறியிருக்க வேண்டும்.

I go lately to school என்பது தவறு. I go late to school எனலாம். Now and than என்பது தவறு. Now and then என்றுதான் குறிப்பிட வேண்டும். Now and then என்றால் அவ்வப்போது என்று பொருள்.

Lie என்பதற்கு பொய் கூறுதல் என்று ஒரு பொருள் உண்டு. படுத்துக் கொள்வது என்றும் ஒரு பொருள் உண்டு. இதனால்தான் I will never lie என்று மீனாட்சி கூறும்போது பாத்திமா கிண்டலாக அப்படியானால் எப்படித் தூங்குவாய் என்று கேட்கிறாள்.

எனவே தெளிவாக I will never utter lies என்றோ, I will never speak lies என்றோ மீனாட்சி கூறியிருக்கலாம். அதுமட்டுமல்ல “அடுத்த வருடம் பொய் சொல்ல மாட்டேன்’’என்பதற்கும் ‘‘அடுத்த வருடத்தில் இருந்து பொய் சொல்ல மாட்டேன்” என்பதற்கும் வேறுபாடு உண்டு.

எனவே I will never lie in next year என்பதற்குப் பதிலாக I will never speak lies from next year என்று மீனாட்சி கூறியிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x