Published : 05 Dec 2019 10:49 AM
Last Updated : 05 Dec 2019 10:49 AM

ஜூனியர் ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா 

கேன்பெர்ரா

இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 3 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் கேன்பெர்ரா நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வென்றது.

இந்திய வீராங்கனைகளான லால்ரிண்டிகி 15-வது நிமிடத்திலும், பிரப்லீன் கவுர் 60-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர்.

இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து வீராங்கனைகள் கோல் அடிக்க முயன்றபோதிலும், இந்திய வீராங்கனைகள் அதை சாமர்த்தியமாக முறியடித்தனர்.

இன்று நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x