Last Updated : 04 Dec, 2019 03:29 PM

 

Published : 04 Dec 2019 03:29 PM
Last Updated : 04 Dec 2019 03:29 PM

சூரிய கிரகணத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வானியல் பயிற்சி

சூரிய கிரகணத்தை ஒட்டி புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வானியல் பயிற்சி முகாம் நடந்தது.

பதுச்சேரி நவநிர்மிதி அறிவியல் நிறுவனம் மற்றும் காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி இணைந்து பள்ளி அளவிலான ‘பகல் நேர வானியல் மற்றும் சூரிய கிரகணம்’ மற்றும் வானியல் பயிற்சி முகாமை குழந்தைகளுக்கு நடத்தின. இந்த முகாமில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அறிவியல் பிரச்சாரக் குழுவினா் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு விஞ்ஞான பிரச்சார் விப்நெட் கலிலியோ அறிவியல் மையம் சார்பில் கண்ணபிரான், நவநிர்மிதி அறிவியல் நிறுவனம் சார்பில் பூஜா மற்றும் விபா புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். பயிற்சியில் டிசம்பா் 26-ம் தேதி அன்று நிகழும் வளைய சூரிய கிரகணம் பற்றிய அறிமுகத்தை மாணவர்களுக்கு விளக்கினர்.

மேலும் இப்பயிற்சி முகாமில், பகல் நேர வானியல் செயல்பாடுகள், இரவு வான் நோக்கல், அறிவியல் விழிப்புணா்வு மற்றும் சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை குறித்தும் தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

மாயாஜாலக் கண்ணாடி, ஊசிதுளை கேமரா, கண்ணாடி மூலம் ஒளிக் குவியல், நானோ சூரியக் குடும்பம், கிரகணம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் பற்றி அறிவியல் விளக்கங்களை பள்ளி அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் விளக்கினார். அறிவியல் ஆசிரியர் சுப்ரமணியன், ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றப் பொறுப்பாளர் அருண் நாகலிங்கம், அன்பரசன், முருகன், ரஞ்சித், ஜெயகுரு, புஷ்பராஜ், ஜெயகிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனா். பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 180 மாணவர்கள் வானியல் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x