மருத்துவ ஆய்வு மையம் அமைக்க இந்தியா - சுவீடன் முடிவு

மருத்துவ ஆய்வு மையம் அமைக்க இந்தியா - சுவீடன் முடிவு
Updated on
1 min read

சுவீடன் மன்னர் 16-ம் கார்ல் கஸ்டாப் மற்றும் அவரது மனைவி ராணி சில்வியா ஆகியோர் 5 நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

இந்நிலையில்,இரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சுவீடன் மூத்த அதிகாரி நிக்லாஸ் ஜேக்கப்சன் கூறுகையில், “டெல்லி மற்றும் ஜோத்பூர் எய்ம்ஸ் டெல்லியில் உள்ள ஸ்வீடிஷ் வர்த்தக ஆணையர் அலுவலகம் இணைந்து, மருத்துவ ஆய்வு மையத்தை அமைக்கும்” என்றார்.

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா: பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புதுடெல்லி

திருட்டு விசிடிகளை ஒழிக்கவும், திரைப்பட திருட்டில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவும் ஒளிப்பதிவு சட்டம் 1952-ல் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு, மாநிலங்கவையில் கடந்த பிப்ரவரி மாதம் மச்சோதா ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த சட்ட திருத்தம் செய்வதன் மூலம், திரைப்படங்களை திருட்டுத் தனமாக வெளியிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழிவகை செய்யப்படும்.

இதற்கிடையில், சட்ட திருத்தம் தொடர்பான அறிக்கையை, 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு நாடாளுமன்ற நிலைக்குழுவை மக்களவையின் சபாநாயகர் கடந்த அக்டோபர் மாதம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பொதுமக்கள், நிபுணர்கள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து தரப்பிடமும் விளக்கம் கேட்கவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in