Published : 04 Dec 2019 08:13 AM
Last Updated : 04 Dec 2019 08:13 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு சரியான வாய்ப்பு வழங்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சரியானவாய்ப்பு வழங்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஊனமுற்றோர் என்று இருந்த பெயர் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றப்பட்டுவிட்டது. தற்போது,தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் என்றேதான் அழைக்கப்படுகிறது. ஆனால், நாட்டின் பிற மாநிலங்களிலும், பல நாடுகளிலும் ஊனமுற்றோர் என்றே அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

உலக ஊனமுற்றோர் தினம் என்றுஇருக்கும் பெயரை, சர்வதேச சிறப்பு திறன் கொண்டவர்களின் தினம் என்று மாற்றவேண்டும். முன்மாதிரியாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஆலோசனைகளை இந்தியாவும், உலக நாடுகளும் பரிசீலனை செய்யவேண்டும்.

பல துறைகளில் சிறந்து விளங்கிய சிறப்புத் திறன்களைக் கொண்ட பல ஆண்களும் பெண்களும் நம்மிடம் உள்ளனர். இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 2.21 சதவீதம், அதாவது 2.68 கோடி மக்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை நாம் வழங்கினால், ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை அவர்களால் கொடுக்க முடியும். மாற்றுத்திறன் கொண்டவர்கள் கடுமையான பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 1990-ல்இருந்ததை விட 2016-ல் சாலை விபத்துக்கள் 65 சதவீதம் அதிகமான உடல் குறைபாடுகளை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x