Published : 03 Dec 2019 04:16 PM
Last Updated : 03 Dec 2019 04:16 PM

6 சிறுபான்மை சமூகத்தினர் தரமான கல்வி பெற மோடி அரசு நடவடிக்கை: அமைச்சர் நக்வி  

6 சிறுபான்மை சமூகத்தினர் தரமான கல்வி பெற, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மதரஸா ஆசிரியர்கள் பயிற்சி விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, ''உருது, அரபி உள்ளிட்ட மதம் சார்ந்த கற்பித்தல் தாண்டி, கணிதம், அறிவியல், கணினியியல், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளையும் கற்பிக்க வேண்டும். இதற்காக மதரஸா ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஏராளமான ஆசிரியர்கள் பெண்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இதுவரை சுமார் 300 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐஐடி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அஞ்சுமான் - இ- இஸ்லாம் மற்றும் பிற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றன. இதன் மூலம் சிறுபான்மையின பெண் குழந்தைகளின் இடைநிற்றல் 70 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜெயின், பார்சி, புத்தம், கிறிஸ்தவம், சீக்கியம் மற்றும் முஸ்லிம் ஆகிய 6 சிறுபான்மையின சமூகத்தினரும் தரமான கல்வி பெற, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆயிரக்கணக்கான மதரஸாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 3T-க்கள் வழங்குவதை அரசு உறுதிப்படுத்துகிறது. அவை டீச்சர், டிஃபன் மற்றும் டாய்லெட்'' என்று மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x