Published : 03 Dec 2019 08:51 AM
Last Updated : 03 Dec 2019 08:51 AM

வாழ்நாளை இருட்டாக்காதீர்கள்

அன்பு மாணவர்களே...

உலகின் அழகை கண்களால் மட்டுமே திருப்தியாக ரசிக்க முடியும். பார்வை இழந்த ஒருவரிடம் கேளுங்கள் பார்வையின் மகத்துவம் குறித்து கூறுவார்கள்.

உலக அளவில் பார்வை குறைபாடு என்னும் நோய் தற்போது அதிகமாகி கொண்டே செல்கிறது. தற்போது 10 பேரில் 4 பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது.

வயதான பின்னர் பார்வை குறைபாடு வருவது இயற்கை. ஆனால், 19 வயதுக்குள் ஒருவருக்கு பார்வை குறை என்றால், 90 சதவீதம் செயற்கை காரணிகளால்தான் வருகிறது எனலாம். உலக அளவில் 19 வயதுக்கு குறைவாக உள்ளவர்களில் 32 கோடி பேர் பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

19 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் உங்களை போல மாணவ செல்வங்கள்தான். 19 வயதுக்கு உட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் மரபு வழியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ள 70 சதவீதம் பேர் முதல் தலைமுறையாக பாதிக்கப்பட்டவர்கள்தான்.

செல்போன், டிவி, கணினி போன்ற மின்னணு சாதனங்களை விடாமல் பார்ப்பதால், கண்களில் உள்ள நீர் வறண்டு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமலும் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

தற்போது உள்ள குழந்தைகள் இந்த 2-ஐயும் அதிகமாக செய்கிறார்கள். எனவே மாணவர்கள் ஆரோக்கியமான உணவு வகை
களை உண்டும், கண்களுக்கு அதிக தொல்லை கொடுக்காமலும் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x