Published : 03 Dec 2019 08:45 AM
Last Updated : 03 Dec 2019 08:45 AM

மாற்றுத்திறன் மாணவ - மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம்: விமானப்படை தளத்தையும் சுற்றிப் பார்த்தனர் 

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி கள் மெட்ரோ ரயிலில் உற்சாகமாக பயணம் செய்தனர். விமானப்படை தளத்தையும் சுற்றி பார்த்தனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படு வதையொட்டி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று முன் தினம் மாற்றுத்திறனாளி மாணவர்க ளுக்கிடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை யின் சார்பில் நேற்று காலை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு 50 மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

விமானப்படை தளத்தை சுற்றி பார்த்தனர். அங்கு, விமானம், ஹெலிகாப்டரை மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் நேரில் பார்த்து ரசித்தனர். விமானப்படை தளத்தில் அளிக்கப்படும் பயிற்சி முறைகள் குறித்து மாணவர்களுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

பின்னர், மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு விமானப் படை தளம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, பிற்பகல் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் வரை 260 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

அப்போது அவர்கள் நண்பர்களு டன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, மாலை 6.30 மணியளவில் மாற்றுத்திறன் மாணவ - மாணவிகள் ராயப் பேட்டை சத்தியம் சினிமாஸ் திரைய ரங்கில் 3 டி வடிவிலான திரைப் படத்துக்கு அழைத்து செல்லப்பட்ட னர். சமூகநலத் துறை அமைச்சர் சரோஜாவுடன் 36 மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் இன்று பிற்பகல் சேலத்தில் இருந்து சென்னை வரை விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x