Published : 03 Dec 2019 08:43 AM
Last Updated : 03 Dec 2019 08:43 AM

மொழிபெயர்ப்பு: வேளாண்மை பல்கலை.யில் ‘ஆக்சிஜன் பூங்கா’

கோயம்புத்தூர்

Oxygen Park with Beema Bamboo established at TNAU

Coimbatore,

Nov 30 (PTI)

An 'Oxygen park' with beema bamboo was established at Tamil Nadu Agricultural University (TNAU) here Saturday.

The park is claimed to be the first of its kind in the district, wherein 590 beema bamboo seedlings were planted at the univeristy, covering 1.45 acres.

Proper silvicultural procedures such as addition of plant growth promoting bacteria, vermi compost, Farm Yard Manure and bio control agents were followed while preparing the pits for planting.
A fully grown bamboo tree to its best growth generates over 300 kg of oxygen every year and it is just sufficient for one person for a whole year.

Further, it has capacity to absorbs 80 tonnes of carbon di oxide per acre every year.

One mature Beema bamboo after four years, sequesters (absorb) more than 400 kgs of carbon di oxide annually from the surrounding areas.

This special bamboo clone was developed by conventional breeding method and not involving Genetically Modified Organism.

Beema Bamboo is one of the fastest growing plants on earth, which grows one and half feet a day under tropical conditions and acts as a best carbon sink for CO2 emission.

Former Tamil Nadu Principal Chief Conservator of Forest, Dr S Balaji inaugurated the park, by
planting the first Beema Bamboo seedling in thepresence of TAU Vice Chancellor N Kumar at a function here. -PTI

வேளாண்மை பல்கலை.யில் ‘ஆக்சிஜன் பூங்கா’

கோயம்புத்தூர்:

பீமா மூங்கில் கன்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஆக்சிஜன் பூங்கா’தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.

வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 1.45 ஏக்கர் பரப்பளவில் 590 பீமா மூங்கில் கன்றுகள் நடப்பட்டன. இவ்வகையிலான பூங்கா முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள், பசுமை உரம், பண்ணை உரம் ஆகியவை கொண்ட சரிவிகித கலவையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

செழித்து வளர்ந்த ஒரு மூங்கில் மரமானது ஆண்டொன்றுக்கு 300 கிலோ ஆக்சிஜனை வெளியிடும். அதுவே ஒரு மனிதர் ஓராண்டு காலம் சுவாசிக்க போதுமானதாகும். இதுதவிர ஒரு ஏக்கர் பரப்பளவு வரை உள்ள 80 டன் கார்பன் டை ஆக்சைடை ஆண்டொன்றுக்கு உள்ளிழுத்துக் கொள்ளும். அதிலும் முதிர்ந்து நான்கு ஆண்டுகளான பீமா மூங்கில் மரங்களால் ஆண்டொன்றுக்கு 400 கிலோ கார்பன் டை ஆக்சைட் வரை உள்ளிழுத்துக் கொள்ள முடியும்.

இந்த வகை மூங்கில் மரங்கள் மரபணு மாற்றத்தின் வழியாக உருவாக்கப்பட்டவை அல்ல. மரபார்ந்த பயிரிடும் முறையில் உருவாக்கப்பட்டவையே. பூமியில் அதிவேகமாக வளரக்கூடிய தாவர வகைகளில் ஒன்று பீமா மூங்கில் செடி. வெப்பமண்டலப் பகுதிகளில் நாள்தோறும் ஒன்றரை அடி அளவுக்கு இவை வளரும். அதே போல கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து கொள்வதிலும் இவை சிறந்தவை.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் என்.குமார் முன்னிலையில் தமிழ்நாடு முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டாக்டர் பாலாஜி அவர்கள் முதல் பீமா மூங்கில் கன்றை நட்டு பீமா மூங்கில் பூங்காவை திறந்து வைத்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x