Published : 03 Dec 2019 08:35 AM
Last Updated : 03 Dec 2019 08:35 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: கடலா அல்லது பார்ப்பதா?

ஜி.எஸ்.எஸ்.

ஒரே தெருவில் வசிக்கும் யமுனா, அனுராதா என்ற இரண்டு பெண்மணிகள் உரையாடுகிறார்கள்.

Yamuna – I had not seen you for the past two weaks. Where are you?
Anuradha – I went to Mysore.
Yamuna – Why?
Anuradha – To sea my son.
Yamuna – How is he?
Anuradha – He earns a lot. He happy.
Yamuna – Can’t he come here?
Anuradha – His employee will not allow.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

Two weeks என்பதே சரியானது. Weak என்றால் பலவீனமான என்று பொருள்.

யமுனா இரண்டு வாரங்களாக அனுராதாவைப் பார்க்கவில்லை. இந்த நிலையில் where are you என்கிறார். அது தவறு. Where were you? என்று கேட்டிருக்க வேண்டும்.

To sea my son என்று கூறுகிறார் அனுராதா. See என்றால் பார்ப்பது. Sea என்றால் கடல். Sun என்றால் சூரியன். Son என்றால் மகன்.

அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதை he happy என்று கூறக் கூடாது. He is happy என்று கூற வேண்டும்.

மைசூரில் வேலை செய்யும் அனுராதாவின் மகன் தமிழ்நாட்டுக்கு வந்துவிட முடியாதா எனக் கேட்க நினைக்கிறார் யமுனா. Can’t he get a transfer என்றோ, can’t he get a job here என்றோ கேட்கலாம். Can’t he come here என்றால் அங்கிருந்து வந்து சேர எந்தப் போக்குவரத்தும் இல்லையோ என்பது போல் அது தொனிக்கிறது.

Employer என்றால் முதலாளி.

Employee என்றால் தொழிலாளி. எனவே அனுராதா employer என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x