Published : 02 Dec 2019 10:57 AM
Last Updated : 02 Dec 2019 10:57 AM

தேர்வுக்குத் தயாரா?: முயற்சியும் பயிற்சியும் முழு மதிப்பெண் தரும்- பிளஸ் 2 கணிதம்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

புரிந்துகொண்டு படிப்பதும், தொடர் பயிற்சி மேற்கொள்வதும் பிளஸ் 2 கணிதத்தில் முழு மதிப்பெண்களை சாத்தியமாக்கும்.

புதிய வினாத்தாள் மாதிரி 90 மதிப்பெண்களுக்கானது. பகுதி-1, 20 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் அமைந்துள்ளது. பகுதி-2 மற்றும் 3
ஆகியவை முறையே 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கானது. இந்த 2 பகுதிகளில் ஒவ்வொன்றும் 10-ல் இருந்து 7 என விடையளிப்பதாக உள்ளது. அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். பகுதி-4, 5 மதிப்பெண்களுக்கானது. இதில் ‘அல்லது’ வகையிலான 7 வினாக்கள் இடம்பெறும்.

தேர்ச்சி நிச்சயம்

ஒவ்வொரு பாடத்தின் பின்னும் உள்ள 1 மதிப்பெண் வினாக்களை தொகுத்துப் படிப்பதன் மூலமே அந்தப்பகுதிக்கு தயாராகி விடலாம். பாடங்கள் 3 மற்றும் 12, பாடம் 5 மற்றும் 10-ன் நடைமுறை கணக்குகள் முக்கியமானவை. இவற்றுடன் பாடம் 5-ன்
‘மையம் குவியங்கள், முனைகள் கண்டு படம் வரைதல்’, பாடம் 6-ல் தனியாக கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகளையும் படித்து 90-க்கு 35 மதிப்பெண்களை குறிவைக்க முடியும்.

அதிக மதிப்பெண்களுக்குஅனைத்துப் பாடங்களையும் முழுமையாக படித்து 1 மதிப்பெண் பகுதியின் பெரும்பாலான வினாக்களுக்கு தயாராகலாம். பாடங்களின் உள்ளிருந்து அடிப்படை கருத்துக்களை தொகுத்துப் படிப்பதன் மூலம் மிச்சமுள்ள ’உருவாக்கப்பட்ட’ வினாக்களுக்கும் தயாராகலாம். இந்த உருவாக்கப்பட்ட வினாக்கள், வழக்கமான பாட வினாக்களில் சற்றே மாற்றம் செய்யப்பட்டதாக இடம்பெற வாய்ப்புள்ளது. உருவாக்கப்பட்ட வினாக்களுக்கு QR மற்றும் ICT Corner பகுதிகளும் உதவும்.

தலா 2 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெற சாத்தியமுள்ள பாடங்கள்: 5, 6, 7, 9, 10.

திருப்பம் தரும் திருப்புதல்

கணிதத்தில் படிப்பதை விட திருப்புதல் முக்கியமானது. அரையாண்டு தேர்வு வரை படிப்பதற்கும், அதன் பின்னரான நாட்களில் திருப்புதலுக்கும் திட்டமிடுதல் நல்லது. இந்த திருப்புதலை அரையாண்டு விடுமுறையில் தினசரி 2 அலகுத் தேர்வுகளேனும் (Unit Test) எழுதிப் பார்ப்பதில் தொடங்கலாம். அலகுத் தேர்வு போன்றே முழுமையான தேர்வை எழுதிப் பார்ப்பதும் அவசியம். பொதுத் தேர்வுக்கு முன்னதாக குறைந்தது 5 முழுத் தேர்வுகள் எழுதி பார்ப்பது நல்லது.

- பாடக் குறிப்புகளை வழங்கியவர்:

எஸ்.எஃப்.சுலைமான்,

முதுகலை ஆசிரியர் (கணிதம்), அரசினர் மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கரணை,
சென்னை.

முழு பயிற்சிக்கான முக்கிய கணக்குகள்

‘ப்ளூ பிரிண்ட்’ இல்லாத கலக்கமும், அனைத்துப் பாடங்களையும் முழுமையாக படிக்க வேண்டிய மலைப்பும் மாணவர் மத்தியில் பரவலாக உள்ளன. அவர்களுக்கு உதவும் நோக்கில், மிகவும் முக்கியமான பாடப் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. இவற்றை முதலில் படிப்பதன் மூலம், கூடுதல் பாடப் பகுதிகளை படிப்பதற்கான தெளிவும், ஊக்கமும் கிடைக்கும்.

பாடம் 1: எடுத்துக்காட்டு பகுதிகள்: 1.4, 1.5, 1.21, 1.27, 1.28 1.39.

பயிற்சி 1.7ல் 3வது கணக்கு.

பாடம் 2: எ.கா பகுதிகள்: 2.8, 2.11, 2.12, 2.13, 2.14, 2.15, 2.16, 2.20, 2.29, 2.34, 2.36. முக்கோண சமனிலி தேற்றம்

பயிற்சிகள் 2.5-ல் 6,7,8; 2.6,ல் 2; 2.7-ல் 6; 2.8-ல் 3,6,7,10.

பாடம் 3:மூலங்கள் A.P, G.P, H.P தொடர்பான கணக்குகள்.

எ.கா: 3.7, 3.10, 3.15, 3.19, 3.20, 3.21, 3.22.

பயிற்சி 3.4ல் 2வது கணக்கு. தலைகீழ் சமன்பாடுகள், விகிதமுறு மூலத்தேற்றம், டெஸ்கார்டே விதி தொடர்பான கணக்குகள்.

பாடம் 4: நேர்மாறு திரிகோணமிதி சார்புகளின் அனைத்து வரைபடங்கள் மற்றும் சார்பகம், வீச்சகம், முதன்மை மதிப்பு தொடர்பான கணக்குகள்.

எ.கா 4.17-ல் 4; 4,22, 4.23, 4.28.

பயிற்சி 4.5-ன் 9-ல் முதல் மற்றும் 4வது கணக்குகள்; 10-ல் உள்ள அனைத்து கணக்குகள்.

பாடம் 5: பரவளையம், நீள்வட்டம், அதிபரவளையம் தொடர்பான நடைமுறை கணக்குகள் முக்கியமானவை.

எ.கா: 5.19, 5.22, 5.23, 5.26,

பயிற்சி 5.2-ன் 4-ல் 4,5,6; 8-ல் 5,6.

பயிற்சி 5.4ல் 7,8.

வட்டம் பகுதியிலிருந்து ஒரு 2 ’அ’ 3 மதிப்பெண் வினா கேட்கப்பட வாய்ப்புண்டு.

பாடம் 6: Cos(α±β), Sin(α±β), எ.கா 6.7, திருப்புத் திறன் மற்றும் விசை செய்த வேலை தொடர்பான கணக்குகள். எ.கா. 6.1, 6.4, 6.8, 6.17, 6.19, 6.23, 6.37, 6.43, 6.44.

பயிற்சிகள் 6.1, 6.2-ன் 10; 6.3-ல் 2,4,7,8; 6.5-ல் 3,4,5; 6.4, 6.7-ல் 1,2,3,4,5,6; 6.8.

தேற்றம் 6.8.

பாடம் 7: 7.1 மற்றும் 7.2-ன் எ.கா. மற்றும் பயிற்சி கணக்குகள்.

எ.கா 7.6, 7.9, 7.10, 7.13, 7.14, 7.15, 7.17, 7.18 7.22, 7.23, 7.24, 7.30, 7.31, 7.36, 7.52, 7.62, 7.71.

பயிற்சிகள் 7.1-ல் 3,7,8,9,10; 7.2-ல் 3,4,5(IV),8,9; 7.5-ல் 12; 7.8-ல் 7.

ரோலின் தேற்றம், லாக்ராஞ்சி தேற்றத்தின் பயன்பாட்டுக் கணக்குகள்.

பாடம் 8: எ.கா 8.9, 8.11, 8.18, 8.19, 8.20, 8.22

பயிற்சி 8.1ல் 1,6,7; 8.2-ல் 4,5; 8.4-ல் 2,7,8,10; 8.7-ல் 3,4,5,6.

பாடம் 9: வரையறுத்த தொகையினை எல்லையாகக் காணல். இடது முனை விதி, வலது முனை விதி, நடுப்புள்ளி வினை, வரையறுத்த தொகையின் பண்பு சார்ந்த கணக்குகள், குறைப்பு வாய்ப்பாட்டுக் கணக்குகள், பெர்னோலி காமா தொகையிடல் மற்றும் பரப்பு சார்ந்த எடுத்துக்காட்டுக் கணக்குகள் ஆகியவை முக்கியமானவை.

பாடம் 10: 10.1, 10.2, 10.3 ஆகியவற்றிலிருந்து 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள், 10.8-ன் எ.கா மற்றும் பயிற்சி கணக்குகள் முக்கியமானவை.

பாடம் 11: எ.கா 11.8, 11.9, 11.10

பயிற்சி 11.2-ல் 5,6. அடர்த்தி சார்பு கொடுக்கப்பட்டு சராசரி, மாறுபாடு(பரவற்படி) காணல், ஈருறுப்பு பரவல் சார்ந்த கணக்குகள்.
பாடம் 12: எ.கா 12.8, 12.9, 12.10

பயிற்சி 12.1-ல் 9,10 மற்றும் ’சமனி உறுப்பு, நேர்மாறு உறுப்பு ஒருமைத் தன்மை வாய்ந்தது-நிரூபணம்’.

எ.கா. 12.14, 12.16, 12.18, 12.19 மற்றும் சமான விதிகள்- நிரூபணங்கள் பயிற்சி 12.2-ல் 5,7,9,12,14,15 ஆகியவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x