Published : 02 Dec 2019 10:13 AM
Last Updated : 02 Dec 2019 10:13 AM

திருப்பூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுங்கள்: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

திருப்பூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரை கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தனியார் நிறுவன பங்களிப்பின் கீழ் மறுசுழற்சி முறை திட்ட தொடக்கவிழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இவ்விழாவில், வீட்டில் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்த மாணவிகளுக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுப் புத்தகங்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துபகுதிகளிலும் பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்
றன. அதன் ஒரு பகுதியாக மாவட்டஊரக வளர்ச்சி முகமை மற்றும் தனியார் நிறுவன பங்களிபுடன் மறுசுழற்சி முறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் ‘இளமையில் கல்’ என்ற முது மொழிகேற்ப மறுசுழற்சி குறித்து அனைத்து மாணவ, மாணவியர்களும் அறிந்து கொள்வதே ஆகும்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 1324 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 600 தனியார் பள்ளிகளுக்கிடையே மறுசுழற்சி குறித்து மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படஉள்ளன.

மாணவ, மாணவிகளின் வீடுகளில் தேவையற்ற நிலையிலுள்ள பேஸ்ட்,பிரஷ், இதர பிளாஸ்டிக் பொருட்கள் இரும்பு, காகித அட்டை பொருட்களுக்கு பதிலாக புதிய நோட்டு புத்தகம்,பேனா, பென்சில் உட்பட மாணவ, மாணவிகளுக்கு தேவையான உபகர
ணங்கள் வழங்கப்படும்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில், பயிலும் மாணவ, மாணவியர்களும் தங்களது அருகிலுள்ள குறைந்தது 6 வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பை பயன்பாட்டை உறுதி செய்தால், திருப்பூர் மாவட்டம் விரைவில் நெகிழிஇல்லா மாவட்டமாக திகழும். திருப்
பூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x