Published : 02 Dec 2019 08:48 AM
Last Updated : 02 Dec 2019 08:48 AM

செய்திகள் சில வரிகளில்: பாகிஸ்தான் எல்லையில் டிரோன்களை  கட்டுபடுத்த தீவிரம்

புதுடெல்லி

மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் சாருதா பதிலளிக்கையில், “பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் வகையில், பழங்குடியின மக்கள் 50 சதவீதம் அல்லது 20 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள்(இஎம்ஆர்எஸ்) 2020-ம் ஆண்டுக்குள் தொடங்கப்படும். இதற்காக ரூ.765.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இமாச்சல பிரதேசத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம்

சிம்லா

இமாச்சல் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சர்வீன் சவுத்ரி கூறுகையில், “டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடந்த தேசிய விளையாட்டு தின விழாவின்போது, பிரதமர் நரேந்திர மோடியால் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ தொடங்கப்பட்டது. மக்கள்
தங்களின் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியை இணைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சியை வலியுறுத்தி தர்மசாலாவில் முதற்கட்ட மாக திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அமையவுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடற்பயிற்சி செய்ய தேவையான சாதனங்கள் இடம்பெறும்” என்றார்.

காகித ஓவியங்கள் இடம்பெறும் கண்காட்சி கொல்கத்தாவில் டிசம்பர் 6-ல் தொடக்கம்

கொல்கத்தா

காகிதத்தில் வரைப்படும் ஓவியங்களை கொண்டு மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கலை கண்காட்சி டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது.

காகிதத்தில் வரைப்படும் ஓவியங்கள் தற்போது குறைந்து சாட் காகிதம், பிளாஸ்டிக் அட்டை, கணினி ஓவியம்தான் அதிகமாகி வருகிறது. எனவே காகித ஓவியங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பிரபல ஓவியர் சுவபிரசன்னா தொடர்ந்து 4 ஆண்டுகளாக ‘ஆர்ட் ஹாட்’ என்ற கலை கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு கண்காட்சியில் பிரபல ஓவியர்களான அர்பிதா அகண்டா, கனஷ்யாம் லதுவா, உட்பட 7 புதிய தலைமுறை ஓவியர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இந்த கண்காட்சியில், தனி ஓவியம், குழு ஓவியங்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன.-பிடிஐ

பாகிஸ்தான் எல்லையில் டிரோன்களை கட்டுபடுத்த தீவிரம்

புதுடெல்லி:

இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அந்நிய நாட்டு டிரோன்களை கட்டுபடுத்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக உள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்எப் தலைமை இயக்குநர் வி.கே.ஜோரி கூறுகையில், “சமீபத்தில் சில நாட்களாக மேற்கு எல்லை முன் (இந்திய - பாகிஸ்தான் பகுதி) டிரோன்கள் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. எனவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிரோன்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது’’ என்றார். பாகிஸ்தான், வங்கதேசத்துடன் உள்ள 6,386 கி.மீ. எல்லைப் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x