Published : 02 Dec 2019 08:30 AM
Last Updated : 02 Dec 2019 08:30 AM

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி கற்க பயிற்றுநர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி கற்க, தொழில் பயிற்றுநர்களை நியமனம் செய்ய வேண்டும்’’ என்று சிறப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்காக 20 அரசு சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு கணினி கல்வியை கற்பிக்க 20 சிறப்பு பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கணினி ஆய்வகம் அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்
பட்டன. ஆய்வகத்துக்கு தேவையானகணினி உள்ளிட்ட உபகரணங்கள் எல்காட் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கணினி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு கற்பிக்ககணினி தொழில் பயிற்றுநர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்
பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மருத்துவ அலுவலர், எல்காட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவினர் மூலம், கணினி தொழிற்பயிற்றுநர் தேர்வு செய்யப்பட்டு நியமனத்துக்கான ஒப்புதல் வழங்கப்படும். இப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் கணினி ஆய்வகம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x