Published : 30 Nov 2019 11:16 AM
Last Updated : 30 Nov 2019 11:16 AM

கீழடி தொல்பொருட்களை ஆய்வு செய்ய ஹார்வர்டு பல்கலை.யுடன் ஒப்பந்தம்: காமராசர் பல்கலை. துணைவேந்தர் தகவல்

கீழடியில் கிடைத்த தொல்பொ ருட்களை ஆய்வு செய்வதற்காக காமராசர் பல்கலைக்கழகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகமும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது.

இது குறித்து காமராசர் பல் கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழர்கள் மற்றும் மூதாதை யர்களின் செயல்களை வெளிக் கொண்டு வருவதில் கீழடி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே காமராசர் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பிச்சப்பன், மனிதன் எங்கு தோன்றினான்?, அவன் எப்போது இந்தியாவுக்கு வந்தான்? என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். இதற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள காம ராசர் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் பிச்சப்பனை, தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் அண்மையில் சந்தித்தார். அவரிடம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வைத் தொடங்க வேண்டும் என வலியுறுத் தப் பட்டது. அதற்கு செயலரும் சம் மதம் தெரிவித்தார். இதை அறிந்த தொல் லியல் துறைச் செயலர் உதயசந்திரன் பிச்சப்பனை அணுகினார். அப்போது, கீழடி தொல்பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உதயசந்திரன் அறிவுறுத்தினார். இதற்கு பிச்சப்பனும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்காக தமிழக அரசுடன் ஒரு மாதத் துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக காமராசர் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த ரூசா திட்ட நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டுள் ளோம். இதனிடையே பிச்சப்பன், பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆகி யோருடன் செயலர் உதயசந்திரன் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

இதன்படி பிச்சப்பன், பால கிருஷ்ணன் ஆகியோர் மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகங்கள் மூலம் தொல் பொருட்களை ஆய்வு செய்ய உள்ளோம். நாங்கள் ஏற்கெனவே மண்ணில் இருந்து மனிதனின் டிஎன்ஏவை எடுக்கலாம் போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்.

இந்த அகழாய்வில் கிடை த்த பொருட்களை ஆய்வு செய் வதற்காக காமராசர் பல்கலை க்கழகத்துடன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணைய உள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்.

நாங்கள் ஆய்வு செய்ய முடியாத சில பொருட்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படும். நாங்களும், ஹார்வர்டு பல்கலை.யும் இணை த்து தொல்லியல் துறைக்கு இறுதி அறிக்கை தருவோம். இதன் மூலம் கீழடியின் தொன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x