Published : 30 Nov 2019 10:50 AM
Last Updated : 30 Nov 2019 10:50 AM

கேரளாவில் சைக்கிள்களை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தில் 10 வயது சிறுவன் புகார்: பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல்

சைக்கிள்களை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தில் 10 வயது சிறுவன் கொடுத்த புகார் விவரம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 10-வயது சிறுவன் அபின். இந்தச் சிறுவன், அங்குள்ள விளாயட்டூர் இளம்பிலாட் எல்.பி. என்னும் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேப்பையூர் போலீஸ் நிலையத்துக்குக் கடந்த 25-ம் தேதி சென்ற அபின், தன்னுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள் என போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தில் இருந்த தாளில் தனது கைப்பட மலையாளத்தில் எழுதி புகாராக அளித்தார் அபின்.

அந்தப் புகாரில் அபின் கூறி யுள்ளதாவது: கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பழுதுபார்ப்பதற்காக சைக்கிள் கடையில் என்னுடைய மற்றும் என்னுடைய சகோதரனின் சைக்கிள்களைக் கொடுத்தோம். ரிப்பேர் செலவுக்காக ரூ.200-ஐ கடைக்காரர் வாங்கிக்கொண்டார். ஆனால், இதுவரை சைக்கிள் களைத் திருப்பித் தரவில்லை. சைக்கிள் குறித்து கேட்பதற்காக போன் செய்தால் அவர் போனை எடுப்பதில்லை.

எத்தனை முறை போன் செய்தாலும் அவர் எடுப்ப தில்லை. நேரில் சென்று பார்க் கும்போது கடை பூட்டியே இருக் கிறது. அவரது வீட்டுக்குச் சென்றால் அங்கும் யாரும் இல்லை. தயவு செய்து எங்களுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள். இவ்வாறு அதில் அபின் கூறியுள்ளார். பள்ளிக்கூடச் சிறுவன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த செய்தி, போலீஸ் அதிகாரிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மேப்பையூர் காவல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிட மிருந்து அடிக்கடி ஏதாவது புகார் கள் வரும். ஆனால், இந்த பத்து வயது சிறுவனின் புகார் எங்களை வெகுவாக ஈர்த்தது. அந்தச் சிறுவன், தனியாக போலீஸ் நிலையம் வந்து, நோட்டுப் புத்தகத் தாளில் புகாரை அளித்தான். மாணவனின் புகாரையடுத்து, அந்த சைக்கிள் கடைக்காரரைத் தொடர்புகொண்டோம்.

அவருக்கு உடல்நலம் சரியில் லாத காரணத்தால், சில நாள்களாக கடையைத் திறக்கவில்லை என்றும் இதற்கிடையில் மகனின் திருமணம் நடந்ததால் அந்த வேலைகளுக்கே நேரம் சரியாக இருந்தது. விரைவில் சைக்கிளை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சிறுவனிடம் தெரிவித்துவிட்டோம். விரைவில் சிறுவனுக்கு சைக்கிள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

சைக்கிள்களை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தில் சிறுவன் செய்த புகார் செய்தி, தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x