Published : 30 Nov 2019 07:22 AM
Last Updated : 30 Nov 2019 07:22 AM

பல்துறை அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்: வேலை இழப்பை சமாளிக்க கார் பந்தய வீரர் சேத்தன் கொராடா அறிவுரை

தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை இழப்பு ஏற்படுவதை சமாளிக்க பல்துறை சார்ந்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கார் பந்தய வீரர் சேத்தன் கொராடா அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்களை இளம் தொழில்முனைவோராக உரு வாக்குவது தொடர்பான கருத் தரங்கம் அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கார் பந்தய வீரர் சேத்தன் கொராடா பேசியதாவது:

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யால் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்கள் நடந்து வருகின்றன. அதன் தாக்கத்தால் அண்மைக் காலமாக தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், மோட்டார் வாகன தொழிற்சாலை தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர்.

திடீரென்று வேலை பறி போகும்போது, வேறு வேலைக் குச் செல்ல முடியாமல் அவர் கள் அவதிப்படுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க மாணர்கள் தங்கள் பள்ளி பருவத்திலேயே பல்துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோரால் வாழ்க்கை முறையைத்தான் உருவாக்கித் தர முடியும். அதில் துறைகளை தேர்ந்தெடுத்து சிறப்படைவது அந்தந்த மாணவர்களின் பொறுப் பும் கடமையும் ஆகும். வேலை இழப்பை சந்திக்கும்போது, நாம் கற்று வைத்திருக்கும் கைத் தொழில் கை கொடுக்கும். நான் வாழ்நாள் முழுவதும் கார் ஓட்ட முடியாது. அதனால் இசை மற்றும் வேளாண்மை தொழிலிலும் ஈடு பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற பின் னணி பாடகர் கவுதம் பரத்வாஜ் பேசும்போது, “நான் சார்ட்டர்டு அக்கவுண்டன்டாக இருந்து கொண்டே, பின்னணிப் பாடக ராகவும் இருந்து வருகிறேன். இதன்மூலம் வருவாயும் கிடைக்கிறது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்கும் பொருள் ஈட்டுவதற்கும் பல் துறை அறிவை பெற்றிருப்பது அவசியம்’’ என்றார்.

சோப்பில் சிற்பம் செதுக் கும் மாணவர் அஸ்வின் மணி கண்டன், பேம்பூலா மழலை யர் பள்ளி இயக்குநர் சுஜாதா விஜய், உமன் ஸ்குவார் அமைப்பின் இணை நிறுவனர் வந்தனா ராமநாதன், தொழில திபர் சூரஜ் விஸ்வநாதன், பேச்சாளர் கவுசிக் ஸ்ரீனிவா சன், இ சோன் இந்தியா நிறு வன நிறுவனர் அஃபிஸ்கான், பல உணவகங்களின் பங்குதா ரர் மாதங்கி குமார் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டி.என்.தர், முதல் வர் சீனிவாசன் ராகவன், துணை முதல்வர் டாபனீஸ் ரோட்ஜர், பள்ளி இளம் தொழில்முனைவோர் பிரிவு வழிகாட்டி பத்மஜா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x