Published : 29 Nov 2019 11:59 AM
Last Updated : 29 Nov 2019 11:59 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - இதுவரை பார்த்ததில்லையா? 

ஜி.எஸ்.எஸ்.

பயணம் செல்ல திட்டமிடும் நண்பர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் இது.

Natesan – We planned to go to Mahabalipuram next week. Who will be joining us?
Ganesh – I will join because I have never saw Mahabalipuram.
Gopal - I will join because I am very interested in architectures.
Ajmal - I will not join because I want to prepare for my examnn.

மேலே உள்ள உரையாடலைப் படித்த போது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

அடுத்த வாரம் மகாபலிபுரம் செல்வதாக திட்டம். யார் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறுகிறார்கள். அந்த ஒவ்வொரு பதிலிலும் ஓர் ஆங்கிலப் பிழை இருக்கிறது.

கணேஷ் “I have never saw Mahabalipuram” என்கிறான். அவன், “I have never seen Mahabalipuram” என்று கூறியிருக்க வேண்டும். கோபால் architectures என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். கட்டிடக்கலை என்பதைக் குறிக்க architecture என்ற வார்த்தையே போதுமானது. இதற்குப் பன்மை கிடையாது. ஆனால், சிலை – சிலைகள் என்பவற்றை முறையே statue, statues ஆகிய வார்த்தைகளின் மூலம் குறிப்பிடலாம்.

அஜ்மல் கூறுவது ‘examnn.' சில பெயர்களை சுருக்கமாக்க குறிப்பிடுவதுண்டு. ஆனால், இஷ்டத்துக்கு அவற்றைச் சுருக்க முடியாது. Examination என்பதன் சுருக்கம்
‘exam.’ என்பதுதான்.

ஒன்றைக் கவனித்தீர்களா? இதுபோன்ற சுருக்கங்களை (abbreviations) எழுதும்போது அவற்றுக்குப் பின்னால் ஒரு முற்றுப்புள்ளியைக் கட்டாயம் வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x