Published : 28 Nov 2019 11:38 AM
Last Updated : 28 Nov 2019 11:38 AM

மொழிபெயர்ப்பு: உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் தீட்டிய மாணவர்கள்

Students create organ donation awareness through posters

New Delhi

School students across Delhi and NCR here participated in a poster-making competition to promote awareness about organ donation.
The competition, 'Organ Donation -- Be a Superhero', was organised ahead of the Indian Organ Donation Day on November 27.
The event, organized by the Organ Receiving & Giving Awareness Network (ORGAN) India, saw students using canvas as their medium to send out messages motivating Indians to pledge their organs and save lives.

Divided into two categories -- one for class 9th and 10th, and other for class 11th and 12th -- the competition was won by Bhomik Raj Lok and Khyati Rawat from the Union Academy School and Udiksha Public School, respectively.

"In India, many suffer from diseases and out of these some of them needs organ transplant to add few more years to their lives. Organ donation is one of the best gifts one can give it to anyone. Through the competition, I am sure that the message will be spread worldwide," said Promila Gupta, principal consultant, Directorate General of Health Services.

ORGAN India is an initiative of the Parashar Foundation, a non-profit NGO based in Delhi, promoting awareness about the cause in all spheres of society, and helping people facing organ failure to get the right help and information.

-PTI

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் தீட்டிய மாணவர்கள்

புதுடெல்லி

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர். தேசிய உடலுறுப்பு தான நாளான நவம்பர் 27-ஐ முன்னிட்டு, ‘உடலுறுப்பு தானம் - சூப்பர்ஹீரோவாக திகழுங்கள்’ என்ற தலைப்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ‘ஆர்கன்’ என்ற உறுப்பு பெறுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு நடத்தியது. உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவோம் என்ற உறுதிமொழியை இந்தியர்கள் எடுக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கேன்வாஸ் துணியில் ஓவியங்கள் தீட்டிப்பட்டன.

இரண்டு பிரிவுகளில் இந்த போட்டியானது நடத்தப்பட்டது. இவற்றில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் யூனியன் அகாடமி பள்ளி மாணவர் போமிக் ராஜ் லோக் வெற்றிபெற்றார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் உதிஷா பள்ளி மாணவர் கியாதி ராவத் வெற்றிபெற்றார்.
‘‘இந்தியாவில் பலர் நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களால் சிலருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டால் அவர்களின் ஆயுள் நீளும். அப்படி இருக்கையில் உடலுறுப்பு தானம்தான் மிகச் சிறந்த பரிசாக இருக்க முடியும். இந்த போட்டியின் மூலம் உடலுறுப்பு தானம் குறித்த செய்தி உலகெங்கும் நிச்சயமாகப் பரவும்” என்றார் உடல்நல சேவைகளின் பொது இயக்குநரகத்தின் முதன்மை ஆலோசகரான ப்ரொமிலா குப்தா.

டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பரஷார் அறக்கட்டளையின் முன்னெடுப்பு ‘ஆர்கன் இந்தியா’ திட்டமாகும். இந்நிறுவனம் சமூகத்தின் அத்தனை அடுக்குகளிலும் இருப்பவர்களுக்கு உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடலுறுப்பு செயலிழந்தவர்களுக்கு உரிய உதவியும் தகவலும் கிடைக்கும்படி உதவி வருகிறது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x