Published : 28 Nov 2019 09:37 AM
Last Updated : 28 Nov 2019 09:37 AM

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ஜோடிக்கு தங்கப் பதக்கம் 

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது.

பாங்காக் நகரில் 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி, சீன தைபேயின் யி-சுவன் - சீ லு சென் ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் 158-151 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x