Published : 28 Nov 2019 08:24 AM
Last Updated : 28 Nov 2019 08:24 AM

காட்டுத்தீ நமக்கு ஒரு பாடம் 

மனோஜ் முத்தரசு

இந்தியாவை பொறுத்தவரையில் காட்டுத்தீ மலை அடிவாரத்தை தாண்டி மனிதர்களிடம் வருவதில்லை. ஆனால், வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. தமிழகத்தில் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மலை ஏற்றம் செய்ய 17 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காட்டுத்தீயின் கோரம் எப்படி இருக்கும் என்று தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் அறிந்து கொண்டன. இந்தியாவை தாண்டி பிற நாடுகளில் காட்டுத்தீயின் கோரம் மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா பேரிடர்களுக்கு பெயர் போனது. ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பேர் தங்களின் உடமைகளை காட்டுத் தீயால் இழக்கின்றனர்.

இந்நிலையில், கலிபோர்னியாவில் நவம்பர் 25-ம் தேதி மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. சான்டா பார்பாரா மலைபகுதியின் உச்சியில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், நவம்பர் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லேட் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீயானது பரவி தலைநகர் சிட்னி வரை வந்துவிட்டது. காற்றின் வேகம், போன்ற இடையூறுகளால் தீயை அணைக்க அந்நாட்டு அரசு போராடி வருகிறது.

உலகளவில் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட காட்டுத்தீ ஏற்படுகிறது. 2019-ல் நவம்பர் 22-ம் தேதி வரை 46,706 காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4.6 கோடி ஹெக்டர் ஏக்கர் நிலம் தீயால் கருகியுள்ளது. காட்டுத்தீயானது கடந்த ஆண்டுகளை விட குறைவாக ஏற்பட்டு வருவதாகவும், அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

காட்டுத்தீயானது 4 வகையாக ஏற்படுகிறது. வறண்ட காலநிலை, மின்னல், எரிமலை வெடிப்பு, மனிதர்களின் தவறுகளால் ஏற்படுகிறது. இயற்கையை நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்றாலும், பருவநிலை மாற்றத்திற்கும் மனிதர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள். மனிதர்களால் நடக்கும் தவறை தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் செய்யும் சின்ன தவறுக்குக்கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். வனப்பகுதியில் சுற்றுலா செல்லும்போது, தேவையில்லாத குப்பைகளை வனத்தில் வீசுவதை முதலில் நாம் நிறுத்தவேண்டும். சமையல் செய்து விட்டு நெருப்பை அணைக்காமல் வருவதும், காட்டுத் தீ ஏற்பட காரணமாக அமைகிறது.

காட்டுத்தீ ஏற்படுவதற்கு 3-ல் ஒருபங்கு மனிதர்களின் தவறுகளால் தான்ஏற்படுகிறது. எனவே மாணவர்களே, நீங்கள் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றால், சுட்ட பொருட்களை காட்டுப்பகுதியில் வீசாதீர்கள். அது தீயாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x