Published : 27 Nov 2019 03:19 PM
Last Updated : 27 Nov 2019 03:19 PM

12 வயதில் டேட்டா சயின்டிஸ்ட் வேலை: சிறு வயதிலேயே அசத்தும் பள்ளி மாணவர்!

பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ஹைதராபாத் மாணவருக்கு டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது.

தெலங்கானா அருகே ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்சவ் பிள்ளி. அவரின் 12 வயது மகன் சித்தார்த் ஸ்ரீவத்சவ் பிள்ளி. இவர் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவருக்கு ஹைதராபாத் மென்பொருள் நிறுவனமான மாண்டெய்க்னி ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸில் டேட்டா சயின்டிஸ்ட் ஆக வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆர்வத்துடன் பேசும் சித்தார்த், ''சிறு வயதிலேயே டேட்டா சயின்டிஸ்ட் ஆக எனக்கு உத்வேகமாக இருந்தது தன்மய் பக்ஷிதான். அவர் கூகுள் நிறுவனத்தில் சிறு வயதிலேயே டெவலப்பராக இணைந்தார். செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அபாரமாகப் பணியாற்றி, உலகுக்கு அதை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இளம் வயதில் எனக்கு வேலை கிடைக்க மிகவும் உதவியாக இருந்தது என் அப்பாதான். அவர்தான் எனக்கு பலதரப்பட்ட தொழில்நுட்பங்களையும் கோடிங்கையும் கற்றுக் கொடுப்பார். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைக் காட்டுவார். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு அவரே காரணம்'' என்கிறார் சிறுவன் சித்தார்த்.

பொறியியல், முதுகலைப் பட்டப்படிப்புகளை முடித்தவர்களே வேலை கிடைக்காமல் திண்டாடும்போது, 12 வயது சிறுவனுக்கு வேலை கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. திறமைக்கு வயது தடையில்லை என்பதையும் உணர்த்துவதாக அமைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x