Published : 27 Nov 2019 10:38 AM
Last Updated : 27 Nov 2019 10:38 AM

அறிந்ததும் அறியாததும்: இணைக்கும் சொற்களை அறிவோம்

இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் பாலமாகச் செயல்படும் சொற்கள், ஆங்கிலத்தில் ‘Linking words’ எனப்படுகின்றன. இது பெரும்பாலும் ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘Linking words’ என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா!

1. However (எனினும்) உதாரணத்துக்கு,

This school has produced best students in the district. However, their teachers are very strict.

இந்தப் பள்ளி இந்த மாவட்டத்திலேயே மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளது. எனினும் இதன் ஆசிரியர்கள் மிகக் கடுமையாக நடந்துகொள்ளக் கூடியவர்கள்.

2. In Contrast (மாறாக) உதாரணத்துக்கு,

House prices have gone up this year. In contrast, car prices seem to be stagnating.

வீடுகளின் விலை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, கார்களில் விலை மந்தமாக காணப்படுகிறது.

3. Nevertheless (இருப்பினும்) உதாரணத்துக்கு,

I had fever so I didn’t want to get up in the morning. Nevertheless, I went to school as usual.

எனக்கு காய்ச்சல் வந்ததால் காலையில் எழுந்திருக்க வேண்டாம் என்று நினைத்தேன். இருப்பினும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றேன்.
மேலும் பல இணைப்புச் சொற்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x