Published : 27 Nov 2019 07:57 AM
Last Updated : 27 Nov 2019 07:57 AM

செய்திகள் சில வரிகளில்: குழந்தை திருமணமா? - தகவல் தெரிவிப்பதை கட்டாயமாக்க முடிவு

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலத் துறைக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று ‘போக்சோ’ சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் தெரிவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு கட்டாயம் தகவலை தெரிவிக்கும் வகையில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: அமைச்சர் தகவல்

புதுடெல்லி

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று மத்திய பால் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவம்பர் 26-ம் தேதி தேசிய பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த விழாவில் மத்திய கால்நடை, பால் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியைவிட இந்தியாவின் பால் உற்பத்தி அதிகமாக உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. நாட்டின் பால் வளத்தை அதிகரித்ததில் வர்கீஸ் குரியன் பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. இந்த நேரத்தில் அவரை, நாட்டு மக்கள் நினைவுகூர்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x