Published : 27 Nov 2019 07:45 AM
Last Updated : 27 Nov 2019 07:45 AM

தூத்துக்குடி அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம்

தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத்துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாத்தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் பயிலும் ஏழை, எளிய மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் விழிப்புணர்வு சுற்றுலாவாக தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பிருந்து 3 பேருந்துகளில் புறப்பட்ட மாணவர்களின் சுற்றுலா பயணத்தை மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன் முன்னிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுலா விழிப்புணர்வு தொடர்பான விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு குற்றாலம் ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் கருப்பையா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x