Published : 25 Nov 2019 07:53 AM
Last Updated : 25 Nov 2019 07:53 AM

செய்திகள் சில வரிகளில்: பாம்பு கடித்து சிறுமி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணி

பாம்பு கடித்து சிறுமி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணி

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் வயநாடு அரசு பள்ளியின் ஒரு வகுப்பறையில் சிறிய சிறிய ஓட்டை இருந்துள்ளது. அதில் விளையாட்டாக காலை நுழைத்த 5-ம் வகுப்பு சிறுமி, கடந்த 20-ம் தேதி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தாள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக முடிக்க பஞ்சாயத்துக்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அமைச்சர் ஏ.சி.மொய்தீன் தெரிவித்தார்.- பிடிஐ

தேசிய நிகழ்த்துக் கலை மையத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

மும்பை: தேசிய நிகழ்த்துக் கலை மையம் (என்சிபிஏ) தனது 50-ம் ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. இதில் இசை, நடனம், நாடகம், உட்பட பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

இந்த கலைத் திருவிழா நவம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தொடங்குகிறது. இதில் தேசிய நிகழ்த்துக் கலை மையத்தின் 50 ஆண்டுகள் பயணத்தின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் மையம் செய்து வந்ததை இனி பாதுகாக்கவும், துடிப்புடன் ஊக்குவிக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இசை அமைப்பாளர் மராத் பிசெங்கலீவ், இணை இசை அமைப்பாளர் ஸனே தலால் ஆகியோரின் மகிழ்ச்சியூட்டும் சிம்பொனி இசைக் கச்சேரியோடு கலை நிகழ்ச்சிக் கொண்டாட்டம் தொடங்கவுள்ளது.- பிடிஐ

வாரணாசியில் நான்கு நாட்கள் வடகிழக்கு மாநில திருவிழா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வடகிழக்கு மாநிலத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் வடகிழக்கு பகுதியின் கலை, பண்பாடு, உணவு, கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் கோயில் நகரம் என்றழைக்கப் படும் வாரணாசியில், ‘வடகிழக்கின் இலக்கு’ என்ற பெயரில் நடக்கும் இந்த திருவிழாவில் கங்கைக்கும் பிரம்மபுத்ராவுக்கும் உள்ள ஒற்றுமைகளை காண முடியும்.

இதன் பண்டைய நாகரீகத்தில் பலவிதமான கைத்தறிகள் மற்றும் பட்டு, ஆன்மிக பாரம்பரியம் மற்றும் துடிப்பான சுற்றுலா தலங்களை காணலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x