Published : 25 Nov 2019 07:35 AM
Last Updated : 25 Nov 2019 07:35 AM

செய்திகள் சில வரிகளில்: கொல்கத்தா பல்கலை. விண்ணப்பங்களில் 3-ம் பாலினம் சேர்ப்பு

சாதனையாளர் விருது: டிச. 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழக அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ.சகாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறிவியல் நகரம் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான, தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது மற்றும் தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது தொடர்பான படிவங்கள் விண்ணப்பிக்க தகுதிகள் www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 20-க்குள் நேரடியாக அளிக்கலாம். அல்லது அறிவியல் நகரம், காந்தி மண்டப சாலை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய வளாகம், சென்னை - 25' என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களை 044 - 2445 4054, 24454034 ஆகிய எண்களில் அறிந்து கொள்ளலாம்.

கொல்கத்தா பல்கலை. விண்ணப்பங்களில் 3-ம் பாலினம் சேர்ப்பு

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில், 3-ம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக, விண்ணப்பப் படிவத்தில், ஆண், பெண் ஆகிய 2 பாலின குறியீடுகளை குறிக்கும் பகுதி இருக்கும். இந்நிலையில், திருநங்கை, திருநம்பிகளுக்காக 3-ம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் பகுதி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், 3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி படிப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x