Published : 22 Nov 2019 07:59 AM
Last Updated : 22 Nov 2019 07:59 AM

செய்திகள் சில வரிகளில்: இந்தியாவின் அகிம்சை, கருணை தேவை- தலாய் லாமா வலியுறுத்தல்

ஒடிசாவில் 20 லட்சம் காலாவதியான வாகனம்: அமைச்சர் தகவல்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில போக்கு வரத்து அமைச்சர் பத்மநாபபெஹெரா மாநில சட்டபேரவையில் நேற்று கூறுகையில், “கடந்த 4 ஆண்டுகளில்(2016-2019) 40,852 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 18,638 பேர் மரணமடைந்துள்ளனர். ஒடிசாவை பொறுத்தவரை, இந்த இறப்பு சதவீதம் மிகவும் அதிகம். சாலை விதிமீறலே விபத்துக்கு முக்கிய காரணம். மாநிலங்களில் 20.9 லட்சம் காலாவதியான வாகனங்கள் ஓடுகின்றன. அதில் 8.75 லட்சம் இருசக்கர வாகனங்கள்தான்” என்றார்.

கர்ப்பிணிக்கு கடற்படை படகில் குழந்தை பிறந்தது

புதுடெல்லி: அந்தமான் தீவில் உள்ளகமார்டோ என்ற குட்டித்தீவில் உள்ள குக்கிராமத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்தமான் கடல் பகுதியில் ரோந்து சென்ற இந்திய போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கடற்படையைச் சேர்ந்த கர்தீப் கப்பலில் இருந்து அதிவிரைவு படகு ஒன்று கிளம்பி சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கும்போது, படகிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் சேயையும் கமோர்டோ ஜெட்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

டெல்லி பஸ்களில் இலவச பயணம் பெண்களின் வருகை 10% அதிகரிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஓடும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இதன்மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பயணத்தைஎளிதாக்கி, வேலை மற்றும் கல்வி தொடர்பான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் அதிகார பங்களிப்பையும் பலப்படுத் தும் என்று முதல்வர் விளக்கமளித்தார்.

அதன்படி, டெல்லியில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு ‘பிங் டிக்கெட்’ விநியோகம் செய்யப்பட்டு, திட்டமானது அக்டோபர் 29-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தும்போது, 32 சதவீத பெண்கள் மட்டுமே இலவசப் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், திட்டத்தை தொடங்கி 22 நாட்களில் (19ம் தேதி வரை) இலவச பயணம் மேற்கொண்ட பெண்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அகிம்சை, கருணை தேவை: தலாய் லாமா வலியுறுத்தல்

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ்’ நிறுவனத்
தின் சார்பில், எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இதில், ‘உலக நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா பேசுகையில், “உலகில் மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு இந்தியாவின் 3,000 ஆண்டு பழமையான பண்டைய நாகரிகங்களான அகிம்சையும் கருணையும் இன்றைய உலகுக்கு தேவைப் படுகின்றன. இதை நவீன கல்வியில் தொடர வேண்டும்” என்றார்- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x