Published : 21 Nov 2019 10:20 AM
Last Updated : 21 Nov 2019 10:20 AM

அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று லண்டன் செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று கல்வி சுற்றுலாவாக லண்டன் செல்ல 8 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாணவ-மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 8 மாணவ, மாணவிகள் கல்விச்சுற்றுலாவாக லண்டனுக்குச் செல்லதேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப்புடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ‘விங்ஸ் டூ ஃப்ளை’ என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளாக அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்தவகையில், கடந்த 2016-ம் கல்வி ஆண்டில் 7 பேர் மலேசியாவுக்கும் 2017-ம் ஆண்டு 8 பேர் ஜெர்மனிக்கும், 2018-ம் ஆண்டு 8 பேர் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கும் இந்த ஆண்டு 26 பேர் சிங்கப்பூருக்கும் கல்விச் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான அறிவியல் சார்ந்த போட்டிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில், 160 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு இடையே குழு கலந்துரையாடல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதிலிருந்து 8 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், விரைவில் லண்டனுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா மாநகராட்சி ரிப்பன்மாளிகை வளாகத்தில் உள்ள அம்மாமாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், லண்டன்செல்ல தேர்வுசெய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஆல்பி ஜான் வர்க்கீஸ், பிரிட்டிஷ் கவுன்சில் சொசைட்டி உதவி இயக்குநர் தீபா சவுந்தரராஜன், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப்செயலர் டி.ஆர்.கோபால கிருஷ்ணன்,விங்ஸ் டு ஃபிளை தலைவர்சவுமியா ஸ்கந்தன் மற்றும்மாநகராட்சி கல்வி அதிகாரி பாரதிதாசன், கூடுதல் உதவி கல்விஅலுவலர்கள், ரோட்டரி கிளப்உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x