Published : 21 Nov 2019 09:35 AM
Last Updated : 21 Nov 2019 09:35 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: தயவுசெய்து உட்காருங்கள்!

ஜி.எஸ்.எஸ்.

மணிகண்டன் வீட்டுக்கு பிரசன்னா வருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் இது.

Manikandan: Come sir. Why have you come?

Prasanna: To meet your father

Manikandan: My father come in ten minutes.

Prasanna: OK. I will wait.

Manikandan: Please seat.

Prasanna: No. I will stand only.

Manikandan: It is your will sir.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்தஉரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

வீட்டுக்கு வந்தவரை why have you come? என்று கேட்கக் கூடாது. May I know the purpose of your visit? என்று கேட்கலாம்.

Meet என்ற வார்த்தைக்கும் meat என்ற வார்த்தைக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

Meet என்றால் சந்திப்பது. Meat என்றால் இறைச்சி.

மணிகண்டன் My father come in ten minutes என்கிறார். அவர் My father will come in ten minutes என்றோ My father will arrive in ten minutes என்றோ கூறியிருக்க வேண்டும்.

ஒருவரை உட்காரச் சொல்ல வேண்டுமென்றால் please sit என்றோ, please be seated என்றோ கூறலாம். Please seat என்று கூறக் கூடாது. seat என்பது இருக்கையைக் குறிக்குமே தவிர உட்காருவதைக் குறிக்காது.

பிரசன்னாவும் I will stand only என்று கூறியிருக்கக் கூடாது. Doesn’t matter என்றோ, I don’t mind standing என்றோ கூறி இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x