Published : 21 Nov 2019 09:30 AM
Last Updated : 21 Nov 2019 09:30 AM

செய்திகள் சில வரிகளில்: உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று- இந்தியாவை வென்றது ஓமன்

மஸ்கட்:

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஓமன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் நேற்று மஸ்கட்டில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின இப்போட்டியில் ஓமன் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ஓமன் வீரரான மோஷின் அல் கசானி, 33-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இப்போட்டியில் தோற்றதன் மூலம் 2022-ம் ஆண்டில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு மங்கியுள்ளது.

கொரிய ஓபன் பாட்மிண்டன் ஸ்ரீகாந்த், சமீர் முன்னேற்றம்

குவான்ஜி:

கொரியாவில் உள்ள குவான்ஜி நகரில், கொரிய ஓபன் பட்டத்துக்கான பாட்மிண்டன் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரரான வாங் விங் வின்செண்டை எதிர்கொண்டார். 37 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், காந்த் 21-18 21-17 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான சமீர் வர்மா, ஜப்பானின் கசுமாசா சகாயை எதிர்கொண்டார் இப்போட்டியில் சமீர் வர்மா 11-8 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தபோது,காயம் காரணமாக சகாய் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இப்போட்டியில் சமீர் வர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x